மத்திய அரசின் ராணுவ நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு ஒரு பார்வை !!

மத்திய அரசு எடுத்துள்ள முடிவின்படி நேற்றைய தினம் கூட்டுபடைகள் தலைமை தளபதி மற்றும் முப்படைகள் தளபதி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து ” கொரோனாவுக்கு எதிரான போரில் களம் இறங்கியுள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோரை கவுரவிக்கும் பொருட்டு விமான அணிவகுப்பு , தரைப்படை இசைக்குழுவினர் மற்றும் கடற்படையின் கப்பல்கள் ஆகியவை அணிவகுப்பு மற்றும் இசையொலி எழுப்பி கவுரவிப்பார்கள்” என தெரிவித்தனர்.

இது அடிப்படையில் ஒரு நல்ல யோசனை அதனை மறுப்பதற்கில்லை, கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னனியில் இருக்கும் அனைவரும் கவுரிக்கப்பட்டு ஊக்கப்படுத்த பட வேண்டும் இதில் மாற்று கருத்தில்லை ஆனால் கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார சூழல் எப்படி இருக்கும் என தெரியாது மேலும் பாதுகாப்பு பட்ஜெட் குறைக்கப்படும் என தகவல்கள் வருகின்றன.

இந்த நிகழ்வுக்கு செலவழிக்கப்படும் தொகை சிறிதாயினும் முப்படைகளின் ஏதேனும் தேவைக்கு அது பயன்படுமாயின் அதுவே நல்லது.

ஆகவே தற்போதைய சூழலில் தலைநகர் தில்லியில் மட்டும் இந்திய விமானப்படையின் சரங் மற்றும் சூரியகிரண் சாகச படையணிகள் அணிவகுப்பு நடத்தி மலர் தூவி கவுரவித்து முடிக்கலாம். இதுவே நல்லது என தோன்றுகிறது.

ஆனால் ஒரு சில பேர் இங்கு இதற்கு செலவாகும் தொகையை கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்த வேண்டும் என கூறிவருகின்றனர்.
முதலில் ஒன்றை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் “முப்படைகள் மேற்கொள்ளும் எந்த நிகழ்ச்சிக்கும் தேவையான பணமும் அவர்களது நிதியில் இருந்து செலவு செய்யப்படுவதாகும், அது அவர்களுக்கு உரியது. அதனால் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டியது மக்களால் தேர்ந்தேடுக்கப்படும் அரசின் கடமையாகும்.
ராணுவம் வேண்டுமானால் அதற்கு உறுதணையாக போக்குவரத்து, மருத்துவ உதவிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் வாயிலாக உதவலாம் ஆனால் அவர்களுக்குரிய இல்லை தேச பாதுகாப்புக்கான பணம் பிடுங்கப்படவோ அல்லது குறைக்கபடவோ கூடாது என்பது எமது கருத்து.