இந்திய வீரர்கள் சீன படையால் கைது செய்யப்பட்டதாக பொய் செய்தி வெளியிட்ட என்.டி.டிவி !!

  • Tamil Defense
  • May 25, 2020
  • Comments Off on இந்திய வீரர்கள் சீன படையால் கைது செய்யப்பட்டதாக பொய் செய்தி வெளியிட்ட என்.டி.டிவி !!

கடந்த சில நாட்களாக கிழக்கு லடாக்கின் கல்வான் நாலா பகுதியில் அதிகளவில் சீன மற்றும் இந்திய படையினர் குவிக்கப்பட்டு உள்ளதை அனைவரும் அறிவோம்.

இதனை பற்றிய பல செய்திகள் வந்தவண்ணம் இருக்கையில் கடந்த வாரம் என் டி டிவி எனும் செய்தி நிறுவனம் இந்திய வீரர்களை சீன படையினர் கைது செய்து பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு விடுதலை செய்ததாக செய்தி வெளியிட்டது.

இதனை அடுத்த இச்செய்தி பற்றி பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் நேற்று இந்திய ராணுவம் ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு பொறுப்பற்ற செயல்களில் ஊடகங்கள் ஈடுபடுவதாக அறிக்கை வெளியிட்டு அந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என விளக்கம் அளித்துள்ளது.