அக்சய் சின்னில் உள்ள கல்வான் பள்ளதாக்கில் நுழைந்த இந்திய வீரர்கள்-சீனா குற்றச்சாட்டு
1 min read

அக்சய் சின்னில் உள்ள கல்வான் பள்ளதாக்கில் நுழைந்த இந்திய வீரர்கள்-சீனா குற்றச்சாட்டு

அக்சய் சின் ( தற்போது சீனக் கட்டுப்பாட்டில் உள்ளது ஆனால் இந்த பகுதி நமக்குச் சொந்தம்) பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய வீரர்கள் நுழைந்து சட்டவிரோதமாக பாதுகாப்பு நிலைகளை அமைத்துள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

சீன எல்லைப் பாதுகாப்பு படை தற்போது அந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக சீன மீடியா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சிக்கிமில் இந்திய வீரர்கள் மற்றும் சீன வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர்.இதில் இரு தரப்பு வீரர்களுக்குமே காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்குமே 1947 முதலே எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது.இந்தியா சீன எல்லையின் 3488கிமீ பிரச்சனைக்குள்ளானதாக உள்ளது.

இதற்கு முன் இந்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் 1962 போரில் இரு நாட்டு இராணுவப் படைகளும் மோதியுள்ளன.

சீன எல்லைக்குள் பாதுகாப்பு நிலை இந்திய படைகள் அமைத்துள்ளதாக சீன மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மே முதலே இந்திய வீரர்கள் எல்லை கடந்து சீன எல்லைக்குள் வந்துள்ளதாக சீனா கூறியுள்ளது.
சீனப் படைகளின் ரோந்து பணிகளை தடுக்கவே இந்தியா இந்த பாதுகாப்பு நிலைகளை அமைத்துள்ளதாக சீனா கூறியுள்ளது.

இந்தியாவின் இந்த செயல் இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ உறவுகளை பாதிப்பதாக அமைந்துள்ளது என சீனா கூறியுள்ளது.