இந்திய உதிரி பாகங்களை வைத்து சரிசெய்ய படும் ஃபிலிப்பைன்ஸ் கடற்படை கப்பல் !!

  • Tamil Defense
  • May 21, 2020
  • Comments Off on இந்திய உதிரி பாகங்களை வைத்து சரிசெய்ய படும் ஃபிலிப்பைன்ஸ் கடற்படை கப்பல் !!

ஃபிலப்பைன்ஸ் கடற்படை கப்பல் பி.ஆர்.பி. ரமோன் அல்காரெஸ் மே7 ஆம் தேதி என்ஜினில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்த காரணத்தால் கொச்சி துறைமுகத்திற்கு சரி செய்யும் பணிக்கு கொண்டு வரப்பட்டது.

இது குறித்து ஃபிலப்பைன்ஸ் கடற்படை செய்தி தொடர்பாளர் லெஃப்டினன்ட் கமாண்டர் மரியா க்ரிஸ்டினா ரோக்ஸாஸ் கூறுகையில் இந்திய உதிரி பாகங்கள் கொண்டு கப்பல் சரி செய்யப்பட்டு வருவதாகவும், மே27 ஆம் தேதி கப்பலின் சரிபார்ப்பு பணிகள் முடிவடையும் என கூறினார்.

ஃபிலப்பைன்ஸ் கடற்படையின் 82ஆவது நடவடிக்கை குழு ஒமன் நாட்டில் இருந்து தங்கள் நாட்டு குடிமக்களை மீட்டு வரும் வழியில் மும்பை துறைமுகத்தில் இருந்து 18 ஃபிலப்பைன்ஸ் சுற்றுலா பயணிகள் மற்றும் 2 லட்சம் முககவசங்களை கொண்டு செல்ல வந்தது. இக்குழுவில் பி.ஆர்.பி ரமோன் அல்காரெஸ் மற்றும் பி.ஆர்.பி டேவோ டெல் சூர் ஆகிய கப்பல்கள் அடங்கும்.

பி.ஆர்.பி. ரமோன் அல்காரெஸ் சரிபார்ப்பு பணிக்கு கொச்சி துறைமுகம் வந்த பின்னர், பி.ஆர்.பி டேவோ டெல் சூர் தனியாக பயணம் மேற்கொண்ட நிலையில் அம்பன் புயல் காரணமாக அதுவும் கொச்சி திரும்பியது.

இனி மே27 க்கு பின்னர் இரு கப்பல்களும் ஃபிலப்பைன்ஸ் நோக்கி இணைந்தே புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.