
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படை தளமான ஐ.என்.எஸ். ராஜாளியை பாதுகாக்கும் பணியில் உள்ள ராணுவ பாதுகாப்பு கோர் படைப்பிரிவினர் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.
எந்தவித வாய்ப்பும் இன்றி ஆத்தூர், பெருமுச்சி போன்ற கிராமங்களில் வாழ்ந்து வரும் ஏழை மக்களுக்கு தங்களது ரேஷனில் இருந்து உணவு பொருட்களையும், வேறு அத்தியாவசிய பொருட்களையும் பாதுகாப்பு படையினர் வழங்கினர்.