வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்க 14 இந்திய கடற்படை கப்பல்கள் தயார் !!

  • Tamil Defense
  • May 3, 2020
  • Comments Off on வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்க 14 இந்திய கடற்படை கப்பல்கள் தயார் !!

இந்திய கடற்படையின் துணை தளபதி வைஸ் அட்மிரல் அஷோக் குமார் ஏ.என்.ஐ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் “இந்திய கடற்படையின் மேற்கு மற்றும் கிழக்கு கட்டளையகங்கள் சார்பாக தலா 4 கப்பல்கள், தெற்கு கட்டளையகம் சார்பாக 3 கப்பல்கள் மற்றும் அந்தமான் முப்படை கட்டளையகத்தில் இருந்து சில கப்பல்கள் என மொத்தமாக 14 கப்பல்களை இந்திய கடற்படை தயார்நிலையில் வைத்துள்ளதாக தெரிவித்தார்.

அரசு உத்தரவு கிடைத்ததும் கப்பல்களை மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவோம் என தெரிவித்தார்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக கப்பல்களில் அனைத்து வீரர்களும் இன்றி மிகவும் தேவையான அளவில் மட்டுமே படையினர் இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

இதை தவிர்த்து இந்திய விமானப்படையின் விமானங்கள் மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் மீட்பு பணிக்கு ஆயத்தமாக வைக்கப்பட்டுள்ளன எனவும் அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மீட்பு நடவடிக்கை குறித்து இந்திய வெளியுறவுத்துறை மற்றும் கூட்டுபடைகள் தலைமை தளபதி அலுவலகம் ஆலோசனை நடத்தி இறுதி அனுமதி வழங்க உள்ளனர்.