1971 இந்திய பாகிஸ்தான் போரின் போது இந்திய கடற்படை கராச்சி துறைமுகத்தை தனது ஏவுகணை கலன்களை அனுப்பி தாக்கி அழித்தது. அப்போது தான் இந்த சிறிய அதிவேக தாக்குதல் கலன்களின் தேவை உரைத்தது.
ஆகவே தற்போது இந்திய கடற்படை அதிநவீன அடுத்த தலைமுறை ஏவுகணை கலன்களை தனது படையில் இணைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த கலன்களில் 8 மேற்பரப்பு தாக்குதல் ஏவுகணைகளுக்கான இடவசதி இதை தவிர 1200கிமீ தூரம் செல்லும் நிர்பய் க்ருஸ் ஏவுகணைகள் மற்றும் 800கிமீ தொலைவு செல்லும் பிரம்மாஸ் ஏவுகணைகளை சுமக்க வல்லது.
இதன் மூலம் இந்திய பெருங்கடலில் அத்துமீறி நுழையும் எதிரி போர்க்கப்பல்களை எளிதாக தாக்கி அழிக்க முடியும்.
இந்த கலன்களின் சிறிய அளவு காரணமாக ரேடாரில் எளிதில் சிக்காது. அதே நேரத்தில் அதிக சக்தி வாயந்த ஆயுதங்களால் எதிரிகளை துவம்சம் செய்யும் என்பதில் ஐயமில்லை.
இந்த கலன்கள் எத்தகைய சூழலிலும் மிதவேகமாக 25நாட்கள் அல்லது அதிவேகமாக 35நாட்கள் வேகத்தில் செல்லும் மேலும் 10 நாட்கள் வேகத்தில் தொடர்ந்து 10மணிநேரம் வரை பயணிக்கும்.
மேலும் தொடர்ந்து 10 நாள் பயணம் செய்தாலும் 25% எரிபொருள் மீதமிருக்கும். மேலும் டேங்கர் கப்பல்களில் இருந்து எரிபொருள் மற்றும் பிற சப்ளை பொருட்களை நிரப்பி கொள்ள முடியும்.
இதில் பி.டி.எம்.எஸ் பாதுகாப்பு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 360டிகிரியில் பாதுகாப்பு அளிக்கும் திறன் கொண்டது.
15கிமீ தாக்குதல் வரம்பு கொண்ட ஒரு பிரதான துப்பாக்கி மற்றும் நெருங்கிய சுயபாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.