இந்தியர்களை மீட்க மாபெரும் நடவடிக்கை-ஆபரேசன் சமுத்ர சேது

கடல் பாலம் என தமிழில் மொழிபெயர்க்க தக்க மபெரும் நடவடிக்கையை இந்திய கடற்படை தொடங்கியுள்ளது.

கொரானா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

மாலத்தீவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஜலஷ்வா மற்றும் மகர் கப்பல்கள் அங்கு சென்றுகொண்டிக்கின்றன.மே 8 முதல் அங்கு இந்தியர்களை இவ்விரு கப்பல்களும் மீட்கும்.இது முதல் கட்ட மீட்பு பணி ஆகும்.

முதல் பயணத்தின் போது கிட்டத்தட்ட 1000 இந்தியர்கள் மீட்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜலஷ்வா கப்பல் மட்டுமே 1000 நபர்களையும் ,மகர் 500 நபர்களையும் மீட்க வல்லது எனினும் சமூக இடைவெளி காரணமாக அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மீட்கப்படும் இந்தியர்கள் கொச்சிக்கு அழைத்து செல்லப்படுவர்.உலகெங்கும் விமான போக்குவரத்து தடை பட்டுல்லதால் இந்த முடிவை இந்தியா எடுத்துள்ளது.