கடலோர ரோந்து கப்பல் மற்றும் இரு படகுகளை படையில் இணைத்த கடலோர காவல் படை

  • Tamil Defense
  • May 17, 2020
  • Comments Off on கடலோர ரோந்து கப்பல் மற்றும் இரு படகுகளை படையில் இணைத்த கடலோர காவல் படை

கடலோர காவல் படைக்காக கோவா கப்பல் கட்டும் தளம் வடிவமைத்து கட்டிய ஐந்து கடலோர ரோந்து கப்பல்களில் முதல் கப்பலான ICGS “Sachet” படையில் இணைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு தயாரிப்பு நேவிகேசன் அமைப்பு மற்றும் தொலைதொடர்பு அமைப்பு இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது.

105மீ நீளம் கொண்ட சாச்செட் கப்பல் 2,350 டன்கள் எடையுடையது.இரு 9,100 KW டீசல் என்ஜின்களுடன் 26நாட் வேகத்தில் செல்லக்கூடியது.6000 நாட்டிகல் மைல் வரை செல்லக்கூடியது.

இரு வானூர்திகள் மற்றும் நான்கு அதிவேக படகுகளை சுமந்து செல்லும் வண்ணம் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் 11 அதிகாரிகள் மற்றும் 110 மாலுமிகளை பெற்றிருக்கும்.இவர்களுக்கு டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராஜேஷ் மிட்டல் தலைமை தாங்குவார்.

இது தவிர C-450 மற்றும் C-451 ஆகிய இரு இடைமறி கப்பல்களும் படையில் இணைக்கப்பட்டது.ஹசிராவில் உள்ள லார்சன் அன்ட் டூப்ரோ தளத்தில் இந்த ரு கப்பல்களும் கட்டப்பட்டன.30மீ நீளம் கொண்ட இந்த இரு கப்பல்களும் 45நாட் வேகத்தில் செல்லக்கூடியது.

இந்த இரு கப்பல்களுக்கு துணை கமாண்டன்ட் கௌரவ் குமார் மற்றும் அசிஸ்டன்ட் கமாண்டன்ட் அகின் சுட்ஸி ஆகியோர் தலைமை தாங்குவர்.