இராணுவ என்ஜினியரிங் சர்விசில் இருந்து 9304 பணியிடங்கள் நீக்கம் – இராணுவ அமைச்சர்

  • Tamil Defense
  • May 8, 2020
  • Comments Off on இராணுவ என்ஜினியரிங் சர்விசில் இருந்து 9304 பணியிடங்கள் நீக்கம் – இராணுவ அமைச்சர்

இராணுவ பொறியியல் பிரிவில் இருந்து 9304 பணியிடங்களை நீக்க இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங் அனுமதி வழங்கியுள்ளார்.

இராணுவத்தில் செலவை குறைத்து குறைந்த அளவிலான சிறந்த படையை உருவாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி லெப்டினன்ட் ஜெனரல் ஷேகத்கர் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எந்த வித சிக்கலான பிரச்சனையையும் எளிதாகவும் அதே சமயம் அதிக செலவில்லாமலும் முடிக்கும் வண்ணம் இன்ஜினியரிங் பிரிவை மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகிறது.சிறிய அதிக செலவில்லா சக்திமிக்க பிரிவாக மாற்ற முயற்சிகள் நடைபெறுகிறது.

இந்திய இராணுவத்தின் இன்ஜினியரிங் கார்ப்சின் ஒரு தூண் போன்ற அமைப்பு தான் இந்த மிலிட்டரி என்ஜினியரிங் சர்விஸ் பிரிவு.இராணுவத்திற்கு முன்னனி பொறியியல் சார் உதவிகளை இந்த பிரிவு வழங்கும்.வருடத்திற்கு 13000 கோடிகள் பட்ஜெட்டில் இந்தியாவிலேயே ஆகப் பெரிய கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அமைப்பாக இந்த பிரிவு உள்ளது.

இராணுவம் மட்டுமல்லாது கடற்படை ,விமானப்படை மற்றும் டிஆர்டிஓ போன்ற பிரிவுகளுக்கும் பொறியியல் சார் உதவிகளை இந்த பிரிவு வழங்கி வருகிறது.

இதற்காக நாடு முழுதும் 600 நிலையங்களை நாடு முழுதும் இந்த அமைப்பு ஏற்படுத்தியுள்ளது.200 வருடத்திற்கு முன்னாள் இந்த பிரிவு ஏற்படுத்தப்பட்டது.