லடாக்கில் இந்திய படைபலம் குறித்த கட்டுரை; இதன் காரணமாக தான் சீனா பதறுகிறது கண்டிப்பாக படிக்கவும் !!

  • Tamil Defense
  • May 27, 2020
  • Comments Off on லடாக்கில் இந்திய படைபலம் குறித்த கட்டுரை; இதன் காரணமாக தான் சீனா பதறுகிறது கண்டிப்பாக படிக்கவும் !!

லடாக் பகுதி முழுமைக்கும் இந்திய தரைப்படையின் 14ஆவது கோர் பொறுப்பாகும்.

இதன் கீழ் 3ஆவது காலாட்படை டிவிஷன் லடாக்கில் சீன எல்லைக்கு பொறுப்பு.

8ஆவது மலையக போர்ப்பிரிவு டிவிஷன்; த்ராஸ் கார்கில் பட்டாலிக் ஆகிய பாக் எல்லையோர பகுதிகளுக்கு பொறுப்பு.

சியாச்சின் ப்ரிகேட் இது எந்த டிவிஷன் கீழும் வராமல் நேரடியாக 14ஆவது கோர் கீழ் இயங்கும்.

ஒரு கவச ப்ரிகேட் மற்றும் ஒரு ரிசர்வ் ப்ரிகேட் இரண்டுமே நேரடியாக 14ஆவது கோர் கீழ் இயங்கும்.

லடாக்கில் ஆக மொத்தம் 7 ப்ரிகேடுகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

1)ஒரு காலாட்படை ப்ரிகேட் என்பது 3000 முதல் 5000வீரர்களை கொண்ட பிரிவாகும் அதாவது 5க்கும் அதிகமான காலாட்படை பட்டாலியன்கள்.

2)ஒரு கவச ப்ரிகேட் என்பது 3 டாங்கி ரெஜிமென்ட்டுகள் (ஒரு ரெஜிமென்ட்டுக்கு 45 டாங்கிகள் வீதம் மூன்று ரெஜிமென்ட்டுகளுக்கு 135 டாங்கிகள் மற்றும் 1 இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை ரெஜிமென்ட் (50 பி.எம்.பி கவச வாகனங்கள் கொண்டிருக்கும்).

3) ஒரு ஆர்ட்டில்லரி ப்ரிகேட் இதன் கீழ் 3 முதல் 5 ஆர்ட்டில்லரி (பிரங்கி) பட்டாலியன்கள் வரும். ஒரு பட்டாலியனில் 18பிரங்கிகள் இருக்கும்.

முதல் மூன்று ப்ரிகேடுகள் காலாட்படை ப்ரிகேடுகள் ஆகும். மேலும் இந்த ப்ரிகேடுகள் முறையே டாங்ஸே, கியாரி, தவ்லத் பெக் ஒல்டி ஆகிய பகுதிகளில் உள்ளன மேலும் ஒரு ஆர்ட்டில்லரி ப்ரிகேடும் உட்படை மேற்குறிப்பிட்ட மூன்று ப்ரிகேடுகளும் மூன்றாவது காலாட்படை டிவிஷன் கீழ் இயங்குபவை ஆகும்.

5ஆவது ப்ரிகேட் ரிசர்வ் ப்ரிகேட் ஆகும்.
6ஆவது ப்ரிகேட் கவசவாகன ப்ரிகேட் ஆகும்
7ஆவது ப்ரிகேட் சியாச்சினில் உள்ளது.

இந்த மூன்று ப்ரிகேடுகளும் நேரடியாக 14ஆவது கோர் ப்ரிகேடின் கீழ் இயங்கி வருகின்றன.

இதை தவிர் தேவைப்பட்டால் களமிறக்க வடக்கு தரைப்படை கட்டளையகத்தின் ரிசர்வ் பிரிவான 39ஆவது மலையக போர் டிவிஷனுடைய வீரர்களை ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் இருந்து நேரடியாக லடாக்கில் களமிறக்க முடியும். இந்த டிவிஷனில் மட்டுமே 10,000க்கும் அதிகமான மலையக போர்ப்பயிற்சி பெற்ற வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தவிர ஒரு ஆர்ட்டில்லரி ப்ரிகேடையும் களமிறக்க முடியும்.

எல்லையோர சாலைகள் மூலமாக இவர்களை எளிதில் களமிறக்க முடியும் இதனால் தான் சீனா பதறி வருகிறது என்பது வெட்டவெளிச்சமாகிறது.