
இந்திய தரைப்படை 36 – டாங்கி நகர்வு வாகனங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இந்த வானகங்கள் 8×8 ட்ரைவ் திறன் கொண்டதாகவும், 70டன்கள் எடை வரை சுமக்கும் திறன் கொண்டதாகவும், எதிர்கால மேம்பாடுகளுக்கான வசதிகளை உள்ளடக்கும் வகையிலும் இருத்தல் வேண்டும்.
கூடுதல் சிறப்பம்சங்கள்:
1)தற்காலத்தில் காணப்படும் அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் இருக்க வேண்டும்.
2)70 டன்கள் எடையுடன், வகுப்பு70 ஐ.ஆர்.சி:6-2014 தரத்திலான பாலங்களை கடக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
3) பி.எஸ்3 தரம் கொண்ட டர்போசார்ஜட் டீசல் என்ஜின்
4) 300 கிலோவாட் திறனுடன், 7டிகிர கோணத்தில் 115 முதல் 125 டன்கள் வரையிலான எடையை சுமக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
5) இந்த வாகனம் எரிபொருள் சிக்கனம் கொண்டதாக இருக்க வேண்டும்.
6)என்ஜினுடைய ஆயுள் 1,50,000கிமீ அல்லது 11ஆண்டுகளாக இருத்தல் வேண்டும்.
7) செயலிழந்த டாங்கியை வாகனத்தின் மேல் இழுத்து ஏற்ற உதவும் விஞ்ச் வசதி இருத்தல் வேண்டும்.
8) இந்த வாகனம் ஏ.பி.எஸ் ப்ரேக் வசதியை கொண்டிருக்க வேண்டும், இதனுடன் சர்வீஸ், எமர்ஜென்ஸி, பார்க்கிங், எக்ஸ்ஹாஸ்ட் ப்ரேக் ஆகியவை இருத்தல் வேண்டும்.
9)அதிக சரிவு கொண்ட பகுதிகளில் வாகனம் பின்னோக்கி வருவதை தடுக்கக்கூடிய வசதி இருத்தல் அவசியம்.
10)ஸ்டியரிங் அமைப்பு
வலதுபுற ஸ்டியரிங் அமைப்பு, டெலஸ்கோப்பீக் பவர் ஸ்டீயரிங் மற்றும் அவசரகால பவர் ஸ்டீயரிங் அமைப்புகள் இருத்தல் அவசியம்.
11) கேபின்:
வெப்பம்,குளிர்சாதன மற்றும் வென்டிலேஷன் வசதி, தானாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் ஓட்டுநர் இருக்கை, 3 பாயின்ட் சீட் பெல்ட்டுகள், முதன்மை மற்றும் இரண்டாவது ஓட்டுநர்களின் இருக்கைகளுக்கு பின்புறம் படுக்கை வசதி ஆகியவற்றை கொண்டு இருக்க வேண்டும்.
12) கேமோஃப்ளாஜ் (வாகனத்தை மறைத்து நிறுத்தும்) வசதிக்கான தன்மை இருத்தல் வேண்டும்.
13) முதன்மை மற்றும் இரண்டாவது ஓட்டுநர்கள் மற்றும் குழுவினருடைய துப்பாக்கிகளை வைப்பதற்கான இடவசதி மேலும் ஷவல்கள், பிக் ஆக்ஸுகள், 5லிட்டர் ஆயில் கேன்கள், 8×20லிட்டர் ஜெர்ரி கேன்கள், 150 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி ஆகியவற்றிற்கான இடவசதி இருத்தல் வேண்டும்.