
காஷ்மீரின் தோடா பகுதியில் இன்று நடைபெற்ற என்கௌன்டர் தற்போது முடிவு பெற்றுள்ளது.இந்த என்கௌன்டரில் இரு முக்கிய ஹிஸ்புல் பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளியான தகவல்படி மசூர் அகமது மற்றும் தாகிர் பட் என்ற இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.இதில் ஒருவன் தோடா பகுதியையும் மற்றொருவன் புல்வாமா பகுதியையும் சேர்ந்தவன் ஆவர்.
செனாப் சமவெளி பகுதியில் இளைஞர்களை மூலைச்சலைவை செய்யும் வேலையில் இருந்தவன் தான் தாகிர்.
இந்த நடவடிக்கையில் ஒரு இராணுவ வீரரும் வீரமரணம் அடைந்துள்ளார்.