
தற்போதைய தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்டதற்கு அவர் சீன படைகளை கையாள்வதில் அனுபவம் வாய்ந்தவர் என பதிவிட்டு இருந்தோம் அது ஏன் என இப்போது பார்க்கலாம்,
கடந்த 2012ஆம் ஆண்டு மோவ் நகரில் அமைந்துள்ள அதிகாரிகளுக்கான பயிற்சி பள்ளியின் மூத்த பயிற்றுனர்களில் ஒருவராக தற்போதைய தரைப்படை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவாணே பணியாற்றி வந்தார.
அப்போது பிரிகேடியர் பதவி வகித்து வந்த அவர் ஒரு அறிக்கை ஒன்றினை தனது பணி நிமித்தம் சமர்ப்பித்தார். அதில் சீனா மிக முக்கியமான பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கும் என கூறியுள்ளார்.
மேலும் இதனை இரண்டு கட்டங்களாக
1) ஆதிக்கம் மற்றும் ஒடுக்குதல்
2) முதலில் தாக்குதல் தொடுத்து ஆதிக்கம் செலுத்துவது என இரண்டு வழிமுறைகளை பின்பற்றி செய்யும் எனவும், இந்த இரண்டு கட்டங்களில் கோட்டை விட்டால் சீன படைகள் போர்க்களத்தில் ஆதிக்கம் பெற்று விடும் எனவும், ஆகவே இந்தியா விரைந்து இந்த இரண்டு வகையான செயல்பாடுளிலும் சீனா ஈடுபடும் போது அதனை முறியடிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்.
அதன்படி தற்போது சீன படைகள் முதலாவது முறையை லடாக் மற்றும் சிக்கீமில் பின்பற்ற முயன்ற போது இந்தியா படைகளை உடனே குவித்து சீன முன்னேற்றத்தை நிறுத்தி ஆதிக்கத்தை அடக்கி உள்ளது.
தற்போது இருபுறமும் படைகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், இது மங்கி விடுமா எல்லது பிரச்சினை பெரிதாகுமா என்பது சீன நடவடிக்கையை பொறுத்து உள்ளது.