
லடாக்கில் இந்தியச் சீனப் படைகள் மோதல் நடந்து வரும் வேளையில் இந்திய இராணுவத்தின் தயார் நிலை குறித்து அறிய இராணுவ தளபதி நரவனே அவர்கள் லடாக்கிற்கு சென்றுள்ளார்.
தற்போது உள்ள நிலை குறித்து வடக்கு கட்டளையக தளபதி லெப் ஜென் ஜோஷி மற்றும் லேயில் உள்ள 14வது கார்ப்ஸ் கமாண்டர் லெப் ஜென் ஹரிந்தர் சிங் அவர்களுடன் உரையாடினார்.
இந்த சந்திப்பு குறித்து எந்த தகவலும் இராணுவம் தெரிவிக்காத நிலையில் சீன ஆக்கிரமிப்பை எதிர்க்க மேலதிக படைகள் அனுப்பப்பட்டு இரண்டாவது பாதுகாப்பு கோடு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி வரும் வேளையிலும் டிப்ளோமேட்டிக் தளத்தில் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டு பதற்றத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இரு நாட்டு படைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து அதிக துருப்புகளை குவித்து வருகிறது.இந்தியா நடத்தி வந்த கட்டுமானத்தையும் ரோந்து பணிகளையும் சீனா தடுத்து நிறுத்தி பிரச்சனை செய்து வருகிறது.