விமானப்படையின் எதிர்காலம் குறித்து விமானப்படை தளபதி பேச்சு

  • Tamil Defense
  • May 31, 2020
  • Comments Off on விமானப்படையின் எதிர்காலம் குறித்து விமானப்படை தளபதி பேச்சு

விமானப்படையின் எதிர்காலம் குறித்து இந்திய விமானப்படை தளபதி பேசியவற்றை சுருக்கமாக தொகுத்துள்ளோம்…!

1) விரைவில் 83 தேஜஸ் மார்க்-1ஏ மற்றும் 70 HTT-40 விமானம் ஆர்டர் செய்யப்பட உள்ளது.இது தவிர LUH வானூர்தியும் ஆர்டர் செய்யப்பட உள்ளது.

2) எதிர்காலத்தில் விமானப்படையில் 40+83 தேஜஸ் Mk I/IA மற்றும் ஆறு ஸ்குவாட்ரான்கள் தேஜஸ் Mk II இருக்கும்.

3) தற்போது மேம்பாட்டில் இருக்கும் AMCA ஐந்தாம் தலைமுறை விமானமாக தான் இருக்கும் என தளபதி உறுதியாக தெரிவித்துள்ளார்.

4) தற்போது விமானப்படையில் 30 ஸ்குவாட்ரான் அளவு விமானங்கள் உள்ளன.

5) 70 பயிற்சி விமானங்கள் 2022 முதல் பெறப்படும்.அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 70 விமானமும் படையில் இணைக்கப்படும்.

6) ஸ்விட்சர்லாந்தில் இருந்து 38 பிளாட்டிபஸ் அடிப்படை பயிற்சி விமானம் மற்றும் 20 மேலதிக ஹாக் விமானங்கள் வாங்கும் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

7)அமெரிக்காவின் ஹனிவெல் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் இருந்து ஜாகுவார் விமானத்திற்கு 80 என்ஜின்கள் வாங்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.

8)மேம்படுத்தப்பட்ட ஏவியோனிக்ஸ் ,சென்சார்கள் மற்றும் EW உதவியுடன் ஜாகுவார் விமானங்கள் 2035 வரை பறக்கும்

9)பராமரிப்பு மற்றும் பாகங்கள் மற்றும் செலவின பிரச்சனைகளை எதிர்காலத்தில் குறைக்க விமானங்களின் வகைகள் குறைக்கப்பட உள்ளது.