ஆக்கிரமிப்பு காஷ்மீரின் காலநிலையை ஔிபரப்ப இந்தியாவிற்கு எதிர்ப்பு-பதற்றத்தில் பாகிஸ்தான்

  • Tamil Defense
  • May 9, 2020
  • Comments Off on ஆக்கிரமிப்பு காஷ்மீரின் காலநிலையை ஔிபரப்ப இந்தியாவிற்கு எதிர்ப்பு-பதற்றத்தில் பாகிஸ்தான்

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்டிஸ்தான் பகுதிகளின் காலநிலையை ஔிபரப்ப இந்தியா எடுத்த முடிவிற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ ஆகிய சேனல்கள் இன்று முதல் பாக் கட்டுப்பாட்டில் உள்ள மிர்பூர்,முசாபராபாத் மற்றும் கில்ஜித் ஆகிய பகுதிகளின் காலநிலைகளை வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் விசமத்தன்னை நிறைந்த மற்றும் ஒரு நடவடிக்கை பாக் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த வருடம் காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்த போதும் மொத்த காஷ்மீரை ஒரு பிரிவாகவும் கில்ஜித் உடன் லடாக் ஒரு பிரிவாகவும் பிரித்து வரைபடம் வெளியிட்டிருந்தது இந்தியா.

தற்போது கில்ஜித் பல்டிஸ்தான் மற்றும் முசாபராபாத் ஆகியவை பாக் கட்டுப்பாட்டில் உள்ளன.

சில நாட்களுக்கு முன் தான் பாக் உச்சநீதி மன்றம் கில்ஜித் பல்டிதான் பகுதியில் தேர்தல் நடத்த பாக் அரசிற்கு அனுமதி அளித்தது.அன்று முதலே இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

ஆக்கிரமிப்பு பகுதிகளை விட்டு உடனே வெளியேற வேண்டும் எனவும் இந்தியா கூறி வருகிறது.