எல்லையோர உள்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தும் இந்தியா, புதிய சுரங்க பாதை விரைவில் திறப்பு !!

  • Tamil Defense
  • May 28, 2020
  • Comments Off on எல்லையோர உள்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தும் இந்தியா, புதிய சுரங்க பாதை விரைவில் திறப்பு !!

சீனா மற்றும் இந்தியா இடையே தொடர்ந்து பதட்டம் நிலவி வரும் நிலையில் இந்தியா தொடர்ந்து தனது பக்கத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சீன எல்லைக்கு போக்குவரத்து வசதி அளிக்கும் ஒரு சுரங்க பாதை உத்தராகண்ட் மாநிலத்தில் தனது கட்டுமான பணிகள் முடிவடையும் காலத்தை நெருங்கி வருகிறது.

எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு உத்தராகண்ட் மாநிலத்தில் சம்பா சுரங்க பாதையின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் அடுத்த வருடம் ஜனவரியில் முடிய வேண்டிய பணி மூன்று மாதம் முன்னரே அக்டோபரில் நிறைவு பெற்று போக்குவரத்து தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பின் இயக்குனர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஹர்பால் சிங் கூறுகையில் 450மீ நீளம் கொண்ட இந்த சுரங்க பணியில் 88கோடி ருபாய் மதிப்பிலான ஆஸ்திரிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த சுரங்க பாதை 12,000 கோடி மதிப்பிலான யமுனோத்ரி, பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் கேதர்நாத் ஆகிய இடங்களை இணைக்கும் 889கிமீ சாலையின் ஒரு பகுதியாகும்.

இந்த சுரங்க பாதையை பயன்படுத்தி ராணுவ தளவாடங்கள் மற்றும் துருப்புகளை எல்லைக்கு மிக அருகில் உள்ள நிலாங் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளுக்கு விரைவாக நகர்த்த முடியும். இந்த சுரங்கம் பைராங்டியில் இருந்து நிலாங் பள்ளதாக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளதால் உட்பகுதியில் இருக்கும் படையணிகளை எல்லைக்கு மிக விரைவாக நகர்த்த முடியும்.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சேலி சுரங்கம் மற்றும் பிரம்மபுத்திரா நதிக்கு அடியில் ஒரு சுரங்கம் என தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன மேலும் இந்த வருடம் ஐந்து திட்டங்கள் முடிவடையும் என கூறப்படுகிறது.