லடாக்கில் ஆக்ரோச ரோந்து பணியை தொடரும் இந்திய வீரர்கள்-எதற்கும் தயார்

கொரானா பரவலுக்கு பிறகு உலக நாடுகளால் ஒதுக்கப்படும் நாடாக சீனா உள்ளது.இதற்கு சீனா கடுமையான விலை தர நேரிடும் என உலக நாடுகளும் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.

சீனாவின் பெரிய வர்த்தக நாடாக அமெரிக்காவும் கூட சீனாவுடனான உறவை முறிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆஸ்திரேலியா மிக கடுமையான முறையில் இதற்கான விசாரணைக்கு ஊக்குவிக்கிறது.

சீனா விரும்பாத பல கேள்விகளை உலக நாடுகள் அதன் மீது கேட்கும் போது இவற்றை சமாளித்து மறக்கசெய்ய உலக நாடுகளிடம் எல்லை தொடர்பான வம்பை அதிகரித்துள்ளது சீனா.

தென் சீனக் கடலில் அமெரிக்காவின் இருப்பை எதிர்த்து வருகிறது.ஆஸ்திரேலியாவிற்கு வரிகளை அதிகப்படுத்தியும் பல இறக்குமதிகளுக்கு தடையும் விதித்து பதிலடி கொடுத்துள்ளது.அதே போல தான் இந்தியாவையும் சீண்டி வருகிறது.

லடாக்கில் சில நாட்களாகவே இந்தியாவிடம் சண்டை இழுத்து வருகிறது.மோதல் ஏற்பட அனைத்து வாய்ப்புகளும் உருவாகியுள்ளது.நாங்கள் பின் வாங்க போவதில்லை என்ற நோக்கத்தோடு தான் சீனா இந்த ஊடுருவலை நடத்தி வருகிறது.

கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பங்கோங் ஏரி என்ற இரு இடத்திலும் ஊடுருவலை ஏற்படுத்தி அதிக வீரர்களை சீனா குவித்துள்ளது.100க்கு மேற்பட்ட கொட்டகைகள் அமைத்து அந்த இடத்தில் காலூன்றியுள்ளனர்.லடாக்கின் ஐந்து பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட வீரர்களை குவித்துள்ளது சீனா.

சீனாவின் குவிப்பிற்கு ஏற்றபடியே ஆக்ரோசமாக இந்தியாவும் படைக்குவிப்பில் ஈடுபட்டுள்ளது.இந்தியாவிற்கு சில மேற்குலக நாடுகளின் ஆதரவும் உள்ளது.

படைகளை வேகமாக எல்லைக்கு நகர்த்த தேவையான கட்டுமானங்களை இந்தியா ஆக்ரோசமாக கட்ட தொடங்கியது.இதுவே சீனாவின் கோபத்திற்கு காரணம் மற்றும் அதனால் தான் பயத்தின் காரணமாக ஊடுருவல்களை நடத்தியுள்ளது.

சீனா நிலஅபகரிப்பு கொள்கையை இயற்கையாகவே கொண்டுள்ளது.இதன் காரணமாக உலகின் பல நாடுகளிடம் வம்பிழுத்து வந்துள்ளது.தைவான்,ஜப்பான் ,பிலிப்பைன்ஸ் என இந்த லிஸ்ட் தொடர்கிறது.