
மாலத்தீவு மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க மூன்று போர்க்கப்பல்களை இந்தியா அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த மூன்று கடற்படை கப்பல்களும் இரு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு இந்தியா அழைத்து வரும்.
முப்பை கடற்பகுதியில் உள்ள ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பலுடன் ஐஎன்எஸ் மகர் கப்பலும் திங்கள் இரவு மாலத்தீவீற்கு அனுப்பப்பட உள்ளது.
அதன் பிறகு ஐஎன்எஸ் ஷர்துல் கப்பல் துபாய்க்கு செல்ல உள்ளது.இந்த மூன்று கப்பல்களும் இந்தியர்களை மீட்டு கொச்சிக்கு அழைத்து வரும்.
அங்கு மீட்கப்பட்டவர்கள் குவாரண்டைன் செய்யப்பட்டு கண்காணிக்கப்படுவர்.