ஆயுதங்களை எல்லைக்கு நகர்த்தும் இந்தியா-மோதிப் பார்க்க முடிவா ?

  • Tamil Defense
  • May 26, 2020
  • Comments Off on ஆயுதங்களை எல்லைக்கு நகர்த்தும் இந்தியா-மோதிப் பார்க்க முடிவா ?

லடாக் எல்லையில் இந்தியா-சீனா மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் சீன ஆயுதங்களை குவித்து வருகிறது.

எல்லையின் குறிப்பிட்ட பல பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த சீன இராணுவ குவிப்பை ஈடுகட்டும் பொருட்டு இந்தியாவும் அதே அளவிலான துருப்புகளை அங்கே குவித்து வருகிறது.

பிரச்சனை நடக்கும் இடங்களை தவிர மற்ற இடங்களிலும் இந்திய இராணுவம் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த செயல்களில் இராணுவம் இறங்கியுள்ளது.

சீன எல்லைக்குள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வீரர்களை தற்போது எல்லைக்கு நகர்த்தியுள்ளது சீனா.இந்திய இராணுவத்தின் 81 மற்றும் 114வது பிரிகேடுகளின் கட்டுப்பாட்டில் வரும் எல்லைப் பகுதிகளில் சீன இராணுவம் படைக்குவிப்பில் ஈடுபட்டுள்ளது.தௌலட் பெக் ஓல்டி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளை தான் இந்த பிரிகேடுகள் காவல் காக்கின்றன.

தவிர பங்கோங் ட்சோ லேக் மற்றும் பிங்கர் ஏரியா பகுதிகளில் கனரக வாகனங்களை சீனா அனுப்பியுள்ளது.அந்த பகுதிகளில் சீனா டென்ட் அமைத்து பங்கர்களையும் ஏற்படுத்தியுள்ளது.

சீன தனது பக்கம் சாலை அமைத்த போது இந்தியாவும் அதிருப்தியை வெளியிட்டது.அதே போல் இந்திய ரோந்து பகுதிக்கு உட்பட்ட பாயின்ட் 14 என்ற இடத்தில் இந்திய இராணுவம் பாலம் அமைக்கும் போது சீனாவும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.