லடாக்கிற்கு மேலதிக படைகளை அனுப்பியுள்ள இந்தியா !!
1 min read

லடாக்கிற்கு மேலதிக படைகளை அனுப்பியுள்ள இந்தியா !!

தற்போது கிழக்கு லடாக்கில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் எல்லை பிரச்சினை காரணமாக பதட்டம் அதிகரித்து வருவதை அறிவோம்.

இந்நிலையில் இந்தியா காஷ்மீரின் உட்பகுதிகளில் நிலைநிறுத்திபட்டு இருந்த பல படையணிகளை ச்ன எல்லைக்கு நகரத்தியுள்ளது அவர்களுக்கு மாற்றாக நாட்டின் மற்ற பாகங்களில் இருந்து வேறு படையணிகள் நகர்த்தப்பட்டுள்ளன.

இதை தவிர லே நகரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஷன் ஒன்று தனது கீழ் உள்ள படையணிகளை எல்லைக்கு நகரத்தியுள்ளதாக தெரிகிறது. ஒரு டிவிஷனில் 10ஆயிரம் முதல் 12ஆயிரம் வீரர்கள் வரை இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவாணே லேவுக்கு சென்று வீரர்களின் தயார்நிலையை ஆய்வு செய்துவிட்டு எந்த சூழலுக்கும் தயாராக இருக்கும்படி அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.