
ஒரு வாரத்திற்கு முன்னர் சீன படையினரும் இந்திய படையினரும் மோதி பின்னர் பதற்றம் தணிந்த நிலையில் தற்போது மீண்டும் மற்றொரு பிரச்சினை தலைதூக்கி உள்ளது.
லடாக்கின் தெம்சாக் பகுதியில் கல்வான் நாலா எனும் இடத்தில் ரோந்து பணியை மேற்கொள்ள வந்த சீன படையினர் அங்கேயே தங்கி உள்ளனர். தற்போதைய நிலையில் 5000 சீன துருப்புகள் மற்றும் 1000 கனரக ராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த டோக்லாம் பிரச்சினைக்கு பின்னர் சீனா தற்போது இவ்வளவு படைகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகள் தரப்பில் இருந்து வரும் தகவல்கள் படி அங்கு ஏதோ கட்டுமான பணிகள் நடைபெறுவதாக தெரிகிறது. இந்திய ராணுவமும் பதிலடியாக படைகளை எதிர்புறம் நகர்த்தி உள்ளது.
இந்திய சீன எல்லையோரம் பல்வேறு பிரச்சனைக்குரிய பகுதிகள் உள்ளது. அத்தகைய 23இடங்களில் தெம்சாக் செக்டாரும் ஒன்றாகும்.
அத்தகைய மற்ற இடங்களாவன, ட்ரிக் மலைப்பகுதி, தும்சிலி, ச்சுமார், ஸ்பங்கர் கேப், லடாக்கின் பாங்காங் ஸோ, நம்கா சு, ஸூம்தோராங் சு, அஸாஃபிலா, யாங்ஸே, திச்சு, அருணாச்சல பிரதேச மாநிலம் திபாங் பள்ளதாக்கில் அமைந்துள்ள ஃபிஷ் டெயில் 1 மற்றும் 2 ,பராஹோட்டி, கவ்ரிக், ஷிப்கி லா போன்றவை ஆகும்.
ஆனால் மே9 ஆம் தேதி இப்பட்டியலில் இல்லாத நாகு லா பகுதியிலும் மோதல் நிகழ்ந்துள்ளது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
இந்த நாகு லா பகுதி சிக்கீம் மாநிலத்தில் உள்ளது ஒட்டுமொத்த சிக்கீம் மாநிலமும் பிரச்சினைக்குரிய பகுதியில் இல்லை ஆனால் அங்கும் மோதல்கள் ஏற்படுவது நல்லதல்ல ஆகவே இந்திய ராணுவம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.