Breaking News

மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கியை விரைவில் இணைக்க தயாராகும் இந்தியா !!

  • Tamil Defense
  • May 14, 2020
  • Comments Off on மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கியை விரைவில் இணைக்க தயாராகும் இந்தியா !!

இந்திய கடற்படை ஏற்கனவே திட்டமிட்டதை போல உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் மூன்றாவது நீர்மூழ்கி கப்பலை படையில் இந்த வருடம் இணைக்க உள்ளது.

இந்த பெயரிடப்படாத கப்பல் “எஸ்4” திட்டத்தை சேர்ந்ததாகும். கொரோனா தொற்று காரணமாக மிக குறைந்த அளவு பணியாளர்களே பணியில் இருந்த நிலையில் கட்டுபாட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் மீண்டும் முழு வீச்சில் தொடங்கும் என கூறப்படுகிறது.

அரிஹந்த் மற்றும் அரிகாட் ஆகிய அணுசக்தியால் இயங்கும் நீர்முழ்கிகள் கட்டுமானம் நிறைவு பெற்று அரிஹந்த் படையில் இணைந்த நிலையில் அரிகாட் கடற்சோதனையில் உள்ளது. அரிகாட் கப்பல் விரைவில் சோதனைகளை முடித்துவிட்டு படையில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த எஸ்4 ரக கப்பல் முந்தைய அரிஹந்த் மற்றும் அரிகாட் ஆகியவற்றை விட அளவில் பெரியதாகவும் அவற்றை விட அதிகளவில் கே4 அணு ஆயுத ஏவுகணைகளை சுமக்கும்.

இதனையடுத்து எஸ்4 ஸ்டார் ரக கப்பலும், அமெரிக்க கடற்படையின் ஒஹையோ ரக நீர்மூழ்கிகள் அளவிற்கு பெரிதான எஸ்5 ரக கப்பல்களும் கட்டப்படும்.

இவற்றை தவிர 6 அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிகளும் உள்நாட்டிலேயே கட்டப்படும் என தெரிகிறது.