அடுத்த கட்ட நகர்விற்கு தயாராகும் படைகள்-37 ஓடுதளங்களை நவீனப்படுத்த முடிவு

விமானப்படை,கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு சொந்தமான 37 ஓடுதளங்களை நவீனப்படுத்த மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.டாடா பவர் நிறுவனத்துடன் 1200கோடிகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாஃபி 2 எனும் திட்டம் மாஃபி 1ன் தொடர்ச்சியாகும் இது நாடு முழுவதும் உள்ள இந்திய விமானப்படையின் 30 ஒடுதளங்களை மேம்படுத்தும் திட்டமாகும். இதன் முலம் ராணுவம் மற்றும் பொது பயனர்களும் பயனடைவர்.

இத்திட்டத்தின் மூலமாக கேட்-2 எனும் தரை இறங்குதல் அமைப்பு, கேட்-2 விமானதள ஒளிவிளக்கு அமைப்பு போன்றவை பொருத்தப்படும்.

விமான தளத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் கட்டுபாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்படும். இதன் காரணமாக கட்டுபாட்டு திறன் பன்மடங்கு அதிகரிக்கும்.

மேலும் இந்த மேம்படுத்துதல் காரணமாக அனைத்து நடவடிக்கைகளையும் எந்த கால நிலையிலும் சிறப்பாக மேற்கொள்ள முடியும். இத்திட்டத்தின் மூலமாக 250க்கும் மேற்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.