
நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது இடைதூர ஏவுகணையின் தாக்குதல் வரம்பை அதிகபடுத்த உள்ளது.
இந்திய விமானப்படைக்கு தயாரிக்க உள்ள இந்த இடைதூர ஏவுகணை தற்போதைய 80கிமீ தாக்குதல் வரம்பில் இருந்து 150கிமீ ஆக அதிகரிக்க உள்ளது.
இஸ்ரேல் 150கிமீ தாக்குதல் வரம்புள்ள பராக் ஏவுகணையை இந்திய விமானப்படைக்கு விற்க முன்வந்த நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்த முயற்சியில் இறங்கி உள்ளது.
ஆனால் இத்திட்டத்தை குறித்து அதிகம் பேசாமல் மவுனம் காத்து வருகிறது.