காரகோரம் கணவாய் அருகே சீனாவிற்கு எதிரான படைக்குவிப்பில் இந்தியா-கட்டுமானங்களை தொடர உத்தரவு

  • Tamil Defense
  • May 27, 2020
  • Comments Off on காரகோரம் கணவாய் அருகே சீனாவிற்கு எதிரான படைக்குவிப்பில் இந்தியா-கட்டுமானங்களை தொடர உத்தரவு

லடாக்கில் சீன அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் தொடர்ந்து தங்களது பணியை இந்திய இராணுவம் மேற்கொண்டு வருகிறது.காரகோரம் கணவாய்க்கு தெற்கே உள்ள கடைசி இராணுவ நிலையான
தௌலத் பெக் ஓல்டி எனும் பகுதியை ஒட்டி கட்டப்பட்டு வரும் பாலம் தொடர்பான பணிகளை தொடர உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த பகுதியில் உள்ள சீன பலத்திற்கு நிகராக இந்திய இராணுவமும் தனது பலத்தை அதிகப்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு குழு பேச்சுவார்த்தைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.எக்காரணம் கொண்டும் எல்லைக் கோடு மாற்றம் செய்யும் எந்தவித செயலையும் அனுமதிக்க கூடாது என நமது படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஆயிரக்கணக்கான வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பங்கோங் ஏரி பகுதியில் முகாமிட்டுள்ளனர்.இந்த நிலைமையை ஒருங்கிணைந்த தளபதி பிரதமர் மோடி அவர்களுக்கு விளக்கி கூறியுள்ளார்.

இதற்கு முன்பு பலமுறை இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளது என்றும் அவற்றை பலம் கொண்ட எதிர்ப்பு மூலம் நமது வீரர்கள் திறம்பட கையாண்டுள்ளனர் என்றும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

டோகாலாமின் 73 நாட்கள் மோதலின் போதுமம நமது வீரர்கள் நிலையை திறம்பட கையாண்டதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

டர்பக்-ஷ்யோக்-தௌலத் பெக் ஆகியவைற்றை இணைக்கும் சாலையை இந்தியா அமைத்து வருவதை சீனா எதிர்க்கிறது.இதற்கான தனது ஆதிக்கத்தை செலுத்தி கட்டுமானத்தை நடக்கவிடாமல் செய்வது தான் அதன் இலக்கு.ஒருமுறை இந்த சாலை அமைக்கப்பட்டால் அங்கு இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியும்.மேலும் படை நகர்வை விரைவு படுத்தலாம்.

தற்போது சீனாவை தடுக்கும் வண்ணம் வீரர்கள் மற்றும் தேவையான படைக்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன.தவிர அந்த பகுதியில் சிறப்பு படை வீரர்களையும் இந்தியா அனுப்பியுள்ளது.

இந்த பிரச்சனை காரணமாக கட்டுமானப்பணிகள் ஒருபோதும் நின்றுவிடப்போவதில்லை.