Breaking News

இந்தியா மற்றும் ஜப்பான் கூட்டு பயிற்சி தள்ளி வைப்பு !!

  • Tamil Defense
  • May 12, 2020
  • Comments Off on இந்தியா மற்றும் ஜப்பான் கூட்டு பயிற்சி தள்ளி வைப்பு !!

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடைபெற்ற இந்திய மற்றும் ஜப்பானிய பாதுகாப்பு துறை கூட்டத்தில் இருநாடுகளின் விமானப்படைகளும் இணைந்து போர் பயிற்சி மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

மேற்குறிப்பிட்ட போர்ப்பயிற்சி இந்த வருடம் ஜப்பானில் நடக்கவிருந்த நிலையில் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய பாதுகாப்பு துறை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

எனினும் இரு நாடுகளும் தொடர்ந்து பாதுகாப்பு ரீதியாக நெருங்கி ஒத்துழைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
அதுவும் கடந்த இரண்டு வருடங்களில் இத்தகைய ஒத்துழைப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஆயுதம், உணவு, எரிபொருள், தகவல் போன்ற பரிமாற்றங்களையும் இணைந்து ஆயுதம் தயாரித்தல் மற்றும் கொள்முதல் குறித்த பேச்சுவார்த்தை வரைக்கும் சென்றுள்ளன.

இரு நாடுகளின் இந்த ஒத்துழைப்பு சீனாவுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட பயிற்சியானது ஜப்பான் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பின் இந்தியாவுடன் நான்காவதாக மேற்கொள்ள இருக்கும் பயிற்சி ஆகும் மேலும்
கடந்த வாரம் ஜப்பானிய பாதுகாப்பு துறை அமைச்சர் டாரோ கானோ இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் தொலைபேசி வழியாக பேச்சவார்த்தை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.