
ஜம்மு மற்றும் மும்பையின் கோவான்டி பகுதியில் நீண்ட நாட்களாக செயல்பட்டு வந்த வி.ஒ.ஐ.பி எக்ஸ்சேஞ்ச் கண்டுபிடிக்க பட்டுள்ளது.
ஜம்முவில் இந்த நடவடிக்கையில் மிலிட்டரி இன்டலிஜென்ஸ் ஈடுபட்டு உள்ளது , மும்பையில் க்ரைம் ப்ராஞ்ச் காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். மும்பையில் இதனை இயக்கி வந்த சமீர் ஆல்வார் கைது செய்யப்பட்டுள்ளான்.
இந்த எக்ஸ்சேஞ்ச் மூலமாக பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி வந்துள்ளனர். இதற்கு பயன்படுத்தி வரப்பட்ட 4 சீன சிம் பெட்டிகள் மற்றும் 191சிம் கார்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இத்தகைய தொழிலுநுட்பத்தை மும்பை தாக்குதலின் போதும் பயங்கரவாதிகளின் உதவியாளர்கள் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.