பாக் மீது தாக்குதல் நடத்த இந்தியா அனைத்து தருணங்களையும் உருவாக்குகிறது-பாக் பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டு

  • Tamil Defense
  • May 18, 2020
  • Comments Off on பாக் மீது தாக்குதல் நடத்த இந்தியா அனைத்து தருணங்களையும் உருவாக்குகிறது-பாக் பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டு

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக கூறி பாக் மீது தாக்குதல் நடத்த அனைத்து தருணங்களையும் இந்தியா உருவாக்கி வருவதாக ஞாயிறு அன்று பாக் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா காஷ்மீரை சட்டவிரோதமாக இணைத்துள்ளதாக ட்டிட்டரில் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

உலக கவனத்தை காஷ்மீரில் இருந்து திசை திருப்பி பாக்கிஸ்தானின் மீது தவறான கொள்கையால் தாக்குதல் நடத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இராணுவ தளபதி பாக் புதிய பயங்கரவாத இயக்கத்தை காஷ்மீரில் உருவாக்கியுள்ளது என கூறியதையும் இம்ரான் கான் மறுத்துள்ளார்.

இருநாடுகளின் உறவு தற்போது வரை பதற்றத்துடன் தான் காணப்படுகிறது.