
சிக்கிமில் உள்ள நாகு லா எல்லையில் இருநாட்டு வீரர்களும் மோதிக்கொண்ட பிறகு தற்போது லடாக்கில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மே 5-6 இரவில் லடாக்கில் உள்ள பேங்காங் ஏரியில் இரு நாட்டு வீரர்களும் கல்லெறிந்து தாக்கி கொண்டதாக புதிக தகவல்கள் வெளியாகியுள்ளது.பேங்காங் ஏரியின் பிங்கர் 5 பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் இரு நாட்டு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லடாக்கில் உள்ள இந்த ஏரி பகுதி எல்லைப் பிரச்சனையாக நீடித்து வருகிறது.1962ல் இங்கு பெரிய போரே நடந்தது.கிட்டத்தட்ட இதே பகுதியில் தான் இரு வருடத்திற்கு முன்பு இரு நாட்டு வீரர்களும் கல்வீசி பயங்கரமாக தாக்கி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பிரச்சனைகள் பெரிய அளவில் சென்று விடாமல் லோக்கல் கமாண்டர்கள் அளவிலேயே பேசி முடிக்கப்படும்.சிக்கிம் பிரச்சனையும் அவ்வாறே முடிக்கப்பட்டது.
ஒரு நாட்டு வீரர்களும் ரோந்து சென்ற போது இந்த சண்டை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.