
இந்திய தரைப்படையின் முதல் சீக்கிய தளபதியும் ,21ஆவது தளபதியுமாக பதவி வகித்து ஒய்வு பெற்றவர் ஜெனரல் ஜோகிந்தர் ஜஸ்வந்த் சிங் ஆவார்.
இவர் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா டிவியின் தளபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது இந்தியா சீனா இடையே போர் நிகழாது.
ஏனெனில் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் நன்மதிப்பு உண்டு மேலும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு , பல நாடுகள் இந்தியாவுடன் நட்புறவை விரும்புகின்றன.
ஆகையால் இந்தியா சீனா இடையே போர் ஏற்பட்டால் பெரும்பாலான நாடுகள் இந்திய ஆதரவு நிலைபாட்டை எடுக்கும் இப்போதே அதன் அறிகுறிகளை காண முடியும்.
ஆகவே இந்தியா சீனா இடையேயான ஒரு போர் மூன்றாவது உலகப்போராக மாறும் வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்றார்.