சிக்கிமில் சீன-இந்திய இராணுவத்தினர் மோதல்-7 சீன வீரர்கள் காயம்

வடக்கு சிக்கிமில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது என மூத்த அதிகாரி இருவர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நாகு லா செக்டாரில் 5000 அடி உயரத்தில் இந்த மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் இரு தரப்பு வீரர்களும் கடுமையான மோதிக்கொண்டுள்ளனர்.

இரு பக்கமும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்திய தரப்பில் நான்கு வீரர்களுக்கும் சீனத் தரப்பில் ஏழு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.இந்த சண்டையில் கிட்டத்தட்ட 150 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதன் பின்பு இந்த சண்டை லோக்கல் லெவலிலேயே பேசி தீர்க்கப்பட்டுள்ளது.பொதுவாக இந்த நாகு லா பகுதியில் சண்டைகள் ஏற்படுவதில்லை என முன்னாள் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொள்வது இது முதல் முறையல்ல.ஆகஸ்டு 2017ல் இரு நாட்டு வீரர்களும் கல்லால் எரிந்து தாக்குதல் நடத்தி சண்டையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.