
இந்த மாதத்தில் இந்திய எல்லைக்குள் சீன படையினர் அத்துமீறி கிழக்கு லடாக் மற்றும் சிக்கீமின் முகுத்தாங் பகுதிகளில் இந்திய படையினரிடம் முரட்டுத்தனமாக நடக்க நமது வீரர்களும் பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இத்தகைய மோதல்கள் வருங்காலங்களில் பன்மடங்கு அதிகரிக்கலாம் அதற்கான அனைத்து அறிகுறிகளும் உள்ளன.
உதாரணமாக இந்தியாவை சுற்றி சீனா தனது ராணுவ கட்டுமானங்களை அதிகரித்து வருகிறது.
உதாரணமாக ஜிபூட்டி, மியான்மர், இலங்கை, மாலத்தீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளலி பல்வேறு துறைமுகங்கள் மற்றும் பிற கட்டுமான பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. ஆனால் அத்தோடு நில்லாமல் ராணுவ தளவாடங்களை குவிப்பதற்கான வசதிகளையும் செய்து வருகிறது.
இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் பகுதிகளில் எல்லாம் சீனா அத்துமீறி வருகிறது. அருணாச்சல பிரதேசம், லடாக், சிக்கீம் உள்ளிட்ட பகுதிகளில் எல்லாம் சீன ராணுவம் இந்திய படைகளுடன் மோதுவதை வழக்கமாக வைத்துள்ளன. மேலும் எல்லையோரம் விமானப்படை தளங்கள், தரைப்பை தளங்கள், சாலைகள், பாலங்கள் என சீனா அசுர வேகத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பாகிஸ்தானின் க்வதர் துறைமுகத்தில் சீன கடற்படையின் கப்பல்களை நிறுத்த முடியும், மியான்மர் மற்றும் இலங்கையிலும் இதே நிலை தான், ஆஃப்ரிக்க நாடான ஜிபூட்டியில் தனது விமானந்தாங்கி கப்பல்கள் உள்ளிட்ட அனைத்து கடற்படை தளவாடங்களை நிறுத்தவும் வசதி செய்து வருகிறது.
ஆகவே தற்போது வரை நிலத்தில் மட்டுமே நிகழ்ந்த மோதல்கள் இனி இந்திய பெருங்கடல் பகுதியிலும் நடக்கலாம் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
சீன கடற்படையின் அசுர வளர்ச்சி மற்றும் சீனாவின் புதிய மரைன் கோர் படைப்பிரிவு இந்தியாவுக்கு தலைவலி அளிக்கும் காலம் தொலைவில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை .