மீண்டும் அதே தவறு இழைக்கப்படுமா ??

இந்திய விமானப்படையின் மிகச்சிறந்த விமானங்களில் மிராஜ்2000 தவிர்க்க முடியாத இடத்தை பெறுகிறது. கடந்த 1985ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் முதலாவது மிராஜ்2000 இணைந்தது.

ஆரம்பகட்டமாக 36 மிராஜ்2000 விமானங்கள் வாங்கப்பட்டன தற்போது இந்திய விமானப்படையில் 41 மிராஜ்2000 விமானங்கள் உள்ளன.

பலமுறை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த பட்டு சுமார் 35வருட காலமாக நாட்டின் சேவையில் உள்ளது. கார்கில் போர், பாலகோட் தாக்குதல் என அசத்தி வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த விமானத்தை மிகப்பெரிய அளவில் கொள்முதல் செய்ய கிடைத்த அரிய வாய்ப்பினை இந்தியா உதாசீனம் செய்துள்ளது. கடந்த 2000ஆவது ஆண்டு டஸ்ஸால்ட் நிறுவனம் உள்நாட்டு தயாரிப்புக்கான வாய்ப்பினை வழங்கிய போது நாம் தட்டி கழித்தோம். இல்லையெனில் சுமார் 150 மிராஜ் 2000 விமானங்கள் நம்மிடம் இருந்து இருக்கும். ஏறத்தாழ 40வருடங்கள் முந்தைய விமானம் இன்றும் நவீன விமானங்களுக்கு சவால் விட்டு வருகிறது அத்தகைய விமானத்தை பெறாமல் தவறு செய்தோம்.

தற்போது 114 ரஃபேல் விமானங்களை வாங்கும் வாய்ப்பினை இந்தியா நழுவ விட்டு அன்று செய்த தவறினை மீண்டும் செய்யக்கூடாது என்பது எமது தாழ்வான வேண்டுகோள் மற்றும் கருத்தும் கூட…