சீனாவுக்கு தகுந்த பதிலடி அளிக்க இந்தியாவால் முடியும் – முன்னாள் தரைப்படை தளபதி ஜெனரல் வேத் ப்ரகாஷ் மாலிக் !!
1 min read

சீனாவுக்கு தகுந்த பதிலடி அளிக்க இந்தியாவால் முடியும் – முன்னாள் தரைப்படை தளபதி ஜெனரல் வேத் ப்ரகாஷ் மாலிக் !!

இந்திய தரைப்படையின் 19ஆவது தளபதியாக பதவி வகித்து ஒய்வு பெற்ற ஜெனரல் வேத் ப்ரகாஷ் மாலிக் இந்தியா டிவியின் தளபதிகள் மாநாட்டில் சமீபத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது சீனா தனது பகல் கனவை விட்டுவிட வேண்டும் கடந்த 1962ஆம் ஆண்டு நடைபெற்ற போரை வைத்து இன்றைய இந்திய ராணுவ பலத்தை சீனா குறைத்து மதிப்பிட கூடாது.

இந்திய தரைப்படை மிகவும் அனுபவம் வாய்ந்த படையாகும், சீனாவிற்கு தகுந்த பதிலடியை அளிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்றார்.

மேலும் அவர் கூறுகையில் சீனா இந்தியா இடையே முழு அளவிலான போர் நடைபெற வாய்ப்பில்லை ஆனால் சிறிய அளவிலான சண்டைகள் நடைபெறலாம்.

சீனா தற்போது உலகின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி செய்து வருகிறது மேலும் எல்லையோரம் நமது கட்டுமானங்களை அந்நாடு விரும்பவில்லை ஆகவே தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது என்றார்.

ஜெனரல் வேத் ப்ரகாஷ் மாலிக் கடந்த 1997 முதல் 2000ஆவது ஆண்டு வரை தரைப்படையின் தளபதியாக இருந்தவர் என்பதும் இவர் பதவி காலத்தின் போதுதான் கார்கில் யுத்தம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.