மீண்டும் நெருங்க முனையும் இந்தியா மற்றும் ரஷ்யா !!

  • Tamil Defense
  • May 4, 2020
  • Comments Off on மீண்டும் நெருங்க முனையும் இந்தியா மற்றும் ரஷ்யா !!

இந்திய ரஷ்ய உறவு என்பது வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது, அதற்கு நாம் இன்று பயன்படுத்தி வரும் மிக்21 விமானங்கள் முதல் இனி வரவுள்ள எஸ்400 வரை சாட்சியாகும்.

ஆனால் சீனாவுடனான மோதலால் இந்தியா அமெரிக்கா பக்கம் சாய்ந்தது, அதை போலவே ரஷ்யா மேற்கு நாடுகளுடனான மோதல் காரணமாக சீனா பக்கம் சாயந்தது.

இவை எல்லாம் சர்வதேச அரசியலின் விளைவு என்றாலும் இரு நாடுகளும் தங்களது உறவுகள் முற்றிலும் துண்டிக்கபடாமல் பார்த்து கொண்டன.

பல்வேறு பிரச்சினைகளில் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் ரஷ்யா ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக காஷ்மீர் விவகாரம், பாலகோட் தாக்குதல் போன்றவற்றை கூறலாம்.

சமீப காலமாக இந்திய ரஷ்ய உறவில் நெருக்கம் அதிகரித்து வருகிறது. துப்பாக்கி, நீர்மூழ்கிகள் என ஆயுதங்களை விற்க ரஷ்யா முனைகிறது.

எது எப்படியோ இந்தியா தன்னிறைவு அடைதலே நம் நாட்டிற்கு நல்லது.