லடாக்கில் படைக்குவிப்பில் இந்தியா; சீனாவும் படைக்குவிப்பில் ஈடுபடுகிறது

  • Tamil Defense
  • May 19, 2020
  • Comments Off on லடாக்கில் படைக்குவிப்பில் இந்தியா; சீனாவும் படைக்குவிப்பில் ஈடுபடுகிறது

பாங்கோங் ஏரி பகுதியில் மே மாதத் தொடக்கத்தில் இரு நாட்டு படைகளும் மோதலில் ஈடுபட்டதற்கு பிறகு இரு நாட்டு எல்லைப் பகுதியும் பதற்றத்தில் உள்ளது.தற்போது இரு நாட்டு படைகளும் லடாக்கில் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருகின்றன.இதற்கு முன்பும் இந்த பகுதியில் பலமுறை சிறு சண்டைகள் நடந்துள்ளன.

கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள டெம்சோக்,சுமாய் மற்றும் தௌலட் பெக் ஓல்டி ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு நிலைகள் அமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுவருகின்றன.

கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றில் திடீரென சீன வீரர்கள் டென்ட் அமைத்து கட்டுமானப்பணிகள் தொடங்கிய பிறகு அதை இந்தியவீரர்கள் எதிர்க்க தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது.இந்திய வீரர்கள் தற்போது நிலைகளை ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இங்கு நடந்த மோதலில் இரு நாட்டு வீரர்களுக்குமே காயம் ஏற்பட்டுள்ளது.2013 ஏப்ரல் மேயில் இதே பகுதியில் மோதல் ஏற்பட்டது.அப்போது சீன வீரர்கள் 19 கிமீ இந்திய பகுதிக்குள் ஊடுருவியிருந்தனர்.இந்திய வீரர்கள் டென்ட் அமைத்து அப்போது எதிர்த்தனர்.