இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கு ஒருவர் எதிரி அல்ல-திடீர் பல்டி அடித்த சீனத் தூதர்

  • Tamil Defense
  • May 28, 2020
  • Comments Off on இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கு ஒருவர் எதிரி அல்ல-திடீர் பல்டி அடித்த சீனத் தூதர்

இந்திய சீன தொடர்பான பிரச்சனை நடந்து வரும் வேளையில் சீனத்தூதர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.எல்லைப் பிரச்சனையில் இந்தியாவை சீனாவும் சீன மீடியாவும் பலமாக சீண்டிய பிறகு தற்போது சீனப்பேச்சின் திசை மாறியுள்ளதாக தெரிகிறது.

புதுடெல்லியில் பேசிய சீனத் தூதர் சன் வெய்டோங் இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கு ஒருவர் பிரச்சனையாக இருக்க முடியாது எனவும் இந்த வேறுபாடுகள் இரு நாட்டு உறவுகளை பாதிக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த இரு நாடும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்தல் வேண்டும் எனவும் கூறியுள்ளார்.எல்லையில் சூழ்நிலை நிலையானதாகவும் கட்டுப்பாட்டிலும் உள்ளது என சீன வெளியுறவு அமைச்சகம் கூறியதை தொடர்ந்து சீனத் தூதர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எல்லையில் பதற்றம் அப்படியே தொடர்கிறது.இரு நாட்டு லோக்கல் கமாண்டர்களும் பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து இணைப்பில் உள்ளனர்.இந்தியா சார்பில் மிகச் சிறந்த கமாண்டர்கள் களத்தில் செயலாற்றி வருகின்றனர்.

சீனா வெளிறேும் வரை இந்தியா பின்வாங்க போவதில்லை எனவும் கட்டுமானப்பணிகள் தொடரும் எனவும் இந்தியா ஏற்கனவே தீர்க்கமாக கூறிவிட்டது.

இந்த வேறுபாடுகள் இரு நாட்டு உறவுகளை மறைத்துவிடாத படி நாம் செயல்பட வேண்டும் எனவும் தொடர்ந்த தொலை தொடர்பு இணைப்புகள் மூலம் பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும் எனவும் சீனத் தூதர் பேசியுள்ளார்.

இந்தியாவும் சீனாவும் நல்ல அண்டை நாடுகளாக தொடர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.ஹேன்ட் இன் ஹேன்ட் போன்ற பயிற்சிகள் மூலம் உறவு நல்ல முறையில் மேம்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.