
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அந்தமான் மற்றும் கோகோ தீவுகளை பயன்படுத்தி கொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது இந்திய பெருங்கடல் பகுதியை ஆஸ்திரேலியா முக்கியமான பகுதியாக கருதினால், அந்தமான் தீவுகளை பயன்படுத்தி கொள்ளலாம் அதே போல் இந்தியா பஸிஃபிக் பிராந்தியத்தை முக்கியமாக கருதினால் ஆஸ்திரேலியாவின் கோகோ தீவுகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
அந்தமான் தீவுகள் மிகவும் முக்கியமான மலாக்கா ஜலசந்திக்கு அருகிலும், கோகோ தீவுகள் முக்கியமான சுந்தோ, லோம்போக் மற்றும் ஒம்பாய் வெடார் ஆகிய இந்தோனேசிய ஜலசந்திகளுக்கு அருகிலும் அமைந்திருப்பது மிகப்பெரிய அளவில் வியூக முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும்.
ஆகவே அடுத்த மாதம் காணொளி மூலமாக நடைபெறவுள்ள இந்திய ஆஸ்திரேலிய சந்திப்பில் இது குறித்த முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.