பாகிஸ்தானை சீண்டும் இந்தியா !!

சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள கில்ஜித் பல்டிஸ்தான் பகுதியில் தேர்தல் நடத்தக்கூடாது என இந்தியா எச்சரித்தது நியாபகம் இருக்கலாம்.

இதன் பின்னர் இந்திய ஊடகங்கள் கில்ஜித் பல்டிஸ்தான் பகுதிகளில் நிலவும் காலநிலை குறித்து செய்தி வெளியிட்டு பாகிஸ்தானை மேலும் வெறுப்பேற்றின.

இந்த நிலையில் தற்போது லடாக் யூனியன் பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கில்ஜித் பல்டிஸ்தான் லடாக் யூனியன் பிரதேச அரசு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதாவது இந்தியாவின் ஒரு பகுதி என அழுத்தம் திருத்தமாக ஒரு செய்தி பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்டுள்ளது.