
சில மாதங்களுக்கு முன்னர் சில தேச துரோக எண்ணம் கொண்ட கடற்படை வீரர்கள் கடற்படை ரகசியங்களை வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த சதித்திட்டத்தில் தலையாய பங்கு வகித்த மொஹம்மது ஹாருண் ஹஜி அப்துல் ரெஹ்மான் லக்டாவாலா என்பவனை மும்பையில் தேசிய புலனாய்வு அமைப்பு இன்று கைது செய்துள்ளது.
தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “இவன் பலமுறை பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு வர்த்தகம் தொடர்பாக செல்வதாக கூறிவிட்டு அங்கு அலி மற்றும் ரிஸ்வான் எனப்படும் பாக் ஐ.எஸ்.ஐ அமைப்பினரை சந்தித்து உள்ளான். இங்கு தகவல் தந்த தேச துரோகிகளுக்கு ஹவாலா வழியாக வரும் பணத்தை கொடுத்துள்ளான்.
கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11கடற்படை வீரர்கள், 2 சிவிலியன்கள், கடைசியில் இந்த மொஹம்மது ஹாருண் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.