புல்வாமாவில் மீண்டும் காரில் கண்ணிவெடி-அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்

  • Tamil Defense
  • May 28, 2020
  • Comments Off on புல்வாமாவில் மீண்டும் காரில் கண்ணிவெடி-அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்

புல்வாமாவில் மீண்டும் காரில் கண்ணிவெடி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சன்ட்ரோ காரில் இந்த ஐஇடி-யை வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.புல்வாமாவின் ராஜ்புரா பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த கண்ணிவெடியை தற்போது இராணுவத்தின் வெடிகுண்டு அகற்றும் பிரிவு பாதுகாப்பாக செயலிழக்கச் செய்துள்ளனர்.

காலையில் ரோந்து சென்று கொண்டிருந்த வீரர்கள் சாலை அருகே இந்த கார் தனித்து நிற்பதை கண்டறிந்துள்ளனர்.சோதனைக்கு பிறகு கண்ணிவெடி கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாபெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.