ஒருங்கிணைந்த தாக்கும் படைக்குழு தயார்-இராணுவ தளபதி அறிப்பு

  • Tamil Defense
  • May 10, 2020
  • Comments Off on ஒருங்கிணைந்த தாக்கும் படைக்குழு தயார்-இராணுவ தளபதி அறிப்பு

இராணுவத்தை நவீனப்படுத்த எடுக்கப்பட்டுவரும் பல்வேறு முயற்சிகளுள் ஒன்று தான் ஒருங்கிணைந்த தாக்கும் குழு கட்டுமானம்.சோதனை முயற்சிய்க இதை தற்போது இராணுவம் சோதித்து வருகிறது.

சிறிய அதே நேரம் மிக கடுமையான தாக்குதல் நடத்தக்கூடிய படையாக சிறு ஒருங்கிணைந்த இராணுவப்படைகள் உருவாக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.

மேற்கு மற்றும் வடகிழக்கு எல்லைப்பகுதியில் ஏற்கனவே சோதனைகள் நடத்தப்பட்டன.தற்போது இந்த படைப்பிரிவை களமிறக்க தாமதம் ஆகி வருகிறது.கொரானாவால் அடுத்த கட்ட நடைமுறை சிக்கல்கள் தடைபெற்றுள்ளது.

இன்பான்ட்ரி,ஆர்டில்லரி,வான் பாதுகாப்பு ,டேங்குகள் மற்றும் தளவாடங்கள் என ஒரு சிறிய படைக்குழுவிற்குள் அத்தனையும் அடங்கும்.இதனால் முன்னேறி செல்லும் படைகள் தாங்களாகவே வியூகம் அமைத்து முன்னேறலாம்.இந்த படையுடைய உதவி தேவை தாமதம் ஏற்படாது.

கொரானாவை கட்டுப்படுத்த இராணுவத்தின் செயல்பாடுகள் பெரிய அளவில் இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன.பெரிய அளவில் பயிற்சிகள் என ஏதும் தற்போது நடைபெறவில்லை.

ஆனால் தகுந்த நேரத்திற்குள் இந்த ஒருங்கிணைந்த தாக்கும் குழு களமிறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.