
இந்திய விமானப்படை நீண்ட காலமாக 8,000 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்து வந்த நிலையில் தற்போது சுதேசி தளவாடங்களுக்கு ஆதரவாக அவற்றை கிடப்பில் போட்டுள்ளது.
சமீபத்தில் எ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா ” 38 பிலாட்டஸ் அடிப்படை பயிற்சி விமானங்களை சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்தும், இங்கிலாந்திடம் இருந்து 20 ஹாக் ஜெட் பயிற்சி விமானங்களை வாங்கவும், 200 ஜாகுவார் போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் ஹனிவெல் நிறுவனத்திடம் இருந்து புதிய என்ஜின்களை வாங்கவும் நினைத்திருந்தோம், ஆனால் தற்போது சுதேசி பொருட்களுக்கு ஆதரவாக அவற்றை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்” என்றார்.
மேலும் இதற்கு மாற்றாக ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 70 பயிற்சி விமானங்களை
வாங்கவும், அதே நிறுவனத்தின் உதவியுடன் ஜாகுவார் என்ஜின்களை தரம் உயர்த்தவும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நமது தயாரிப்பான ஹெச்.ஏ.எல் ஹெச்.டி.டி 40 இனி இந்திய விமானப்படையின் அடிப்படை பயிற்சி விமானமாக இருக்கும்.