
வானூர்தி தொழில்நுட்ப கோளாறு காரணமாக வடக்கு சிக்கிமின் பனிச்சிகரத்தில் சிக்கியிருந்த விமானப்படை வீரர்களை மீட்பு படை வீரர்கள் மீட்டுள்ளனர்.
இராணுவம் மற்றும் விமானப்படை இணைந்த மீட்புக்குழு இந்த செயலை துணிந்து மேற்கொண்டது.
15500 அடி உயரத்தில் பனி சிகரங்களுக்கு மத்தியில் கொடூரமான இரக்கமற்ற காலநிலையில் இந்த மீட்பு பணியை வீரர்கள் மேற்கொண்டனர்.
இந்த பகுதிக்கு தரை வழியாக செல்ல முடியாது.அதாவது தரை வழியாக இந்த பகுதியை அனுகவே முடியாது.
நான்கு விமானப்படை வீரர்கள் மற்றும் ஒரு ஏர் டிஸ்பேட்ச் வீரரை இந்த மீட்பு குழு வெற்றிகரமாக மீட்டுள்ளது.
இந்த செயல் நமது வீரர்களின் பலத்தையும் தைரியத்தையும் உறுதிப்படுத்துவதாய் உள்ளது.