100 ஐந்தாம் தலைமுறை விமானங்கள் மற்றும் 200 தேஜஸ் வாங்க உள்ளோம்: விமானப்படை

  • Tamil Defense
  • May 19, 2020
  • Comments Off on 100 ஐந்தாம் தலைமுறை விமானங்கள் மற்றும் 200 தேஜஸ் வாங்க உள்ளோம்: விமானப்படை

114 பலபணி போர்விமானங்கள்,100 ஏஎம்சிஏ விமானங்கள் மற்றும் 200 எல்சிஏ தேஜஸ் விமானங்கள் விமானப்படைக்காக வாங்க உள்ளதாக விமானப்படை தளபதி பதாரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் மேற்கு முனைகளில் நிலைநிறுத்த எதிர்காலத்தில் 450 விமானங்கள் வரை வாங்கப்பட உள்ளதாக விமானப்படை தளபதி கூறியுள்ளார்.

36 ரபேல் விமானங்கள் உட்பட 114 பலபணி போர்விமானங்கள்,100 ஏஎம்சிஏ விமானங்கள் மற்றும் 200 எல்சிஏ தேஜஸ் விமானங்கள் வாங்கப்பட உள்ளதாக தளபதி தெரிவித்துள்ளார்.

அடுத்த 15 ஆண்டுகளுக்குள் 83 தேஜஸ் விமானங்கள் இணைக்கப்படும்.அதை தொடர்ந்து 100 தேஜஸ் மார்க் 2 விமானங்கள் இணைக்கப்படும் என தளபதி தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் தலைமுறை விமானமான ஏஎம்சிஏ ஆறு ஸ்குவாட்ரான்கள் இணைக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்த விமானங்கள் அனைத்தும் படையில் இணைய அடுத்த 35 ஆண்டுகள் வரை ஆகும் என அவர் கூறியுள்ளார்.

பயிற்சி விமானங்கள் தேவைக்காக 70 எச்டிடி-40 விமானம் இணைக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.