புதிதாக பெறப்பட்ட சின்னூக் வானூர்திகளை சீன எல்லைக்கு உடனடியாக அனுப்பும் விமானப்படை
சீன எல்லைக்கு உடனடியாக படைகள் மற்றும் ஆர்டில்லரிகளை நகர்த்த வசதியாக புதிதாக பெறப்பட்ட சின்னூக் வானூர்திகளை அஸ்ஸாமில் உள்ள மோகன்பாரி விமானப்படை தளத்திற்கு அனுப்பியுள்ளது விமானப்படை.
வியாழன் அன்று அருணாச்சல் செக்டாரின் விஜயநகர் செக்டாரில் மூன்று புறமும் மியான்மர் எல்லையால் சூழப்பட்ட பகுதிகளுக்கு 8.3டன்கள் அளவு சப்ளைகளை கொண்டு சென்றது.
இது தொடர்பான கானொளியை அருணாச்சல் முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
மொகன்பாரி பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சின்னூக் வானூர்திகள் விரைவில் அருணாச்சல் மற்றும் சிக்கிம் பகுதிகளில் ஆபரேசன்களுக்காக நிலைநிறுத்தப்பட உள்ளது.
எல்லைக்கு உடனடியாக படைநகர்வு செய்ய சின்னூக் ஆகச் சிறந்த ஆயுதமாக உள்ளது.20000 அடி உயரம் வரை பறக்க கூடியதாகவும்,பள்ளதாக்கு பகுதிகளுக்கு உடனடியாக ஆயுதம்,வீரர்கள், தளவாடங்களை சுமந்து செல்லும் திறன் படைத்ததாகவும் உள்ளது.
சாலை மூலம் அனுக முடியாத பகுதிகளுக்கும் தேவையான சப்ளைகள் கொண்டு செல்ல சின்னூக் வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.