
இந்திய சீன எல்லையில் சீன இராணுவ வானூர்தி தென்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை எதிர்கொள்ள இந்திய விமானப்படை தனது போர்விமானத்தை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக சிக்கிமின் நாகு லா பகுதியில் இந்திய இராணுவ வீரர்களும் சீன வீரர்களும் மோதிக் கொண்டனர்.இதில் சீனத்தரப்பில் ஏழு வீரர்களும் இந்திய தரப்பில் நான்கு வீரர்களும் காயமடைந்தனர்.
அதன் பின் லடாக் எல்லையில் இரு நாட்டு படைகளும் கற்கள் எறிந்து தாக்குதல் நடத்தினர்.லோக்கல் கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் சுமுகமாக தீர்வு காணப்பட்டது.
அதன் பிறகு சீனா இந்தியாவை இணைந்து செயல்பட அழைப்பு விடுத்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.