இந்தியாவுக்கு எஃப்35 எவ்வாறு உதவியாக இருக்கும் ?? இந்திய பொருளாதாரமும், ஒவ்வொரு இந்திய குடிமகனும் எங்ஙனம் பயனடைவர் ?? ஒரு சிறிய கட்டுரை !!
1 min read

இந்தியாவுக்கு எஃப்35 எவ்வாறு உதவியாக இருக்கும் ?? இந்திய பொருளாதாரமும், ஒவ்வொரு இந்திய குடிமகனும் எங்ஙனம் பயனடைவர் ?? ஒரு சிறிய கட்டுரை !!

இந்திய விமானப்படைக்கு 114 போர் விமானங்களை வாங்குவதற்கான தேடல் நடைபெற்று வருகிறது என்பதை அனைவரும் அறிவோம்.

தற்போதைய இந்திய சீன எல்லை பிரச்சினையை அடிப்படையாக கொண்டு யோசிக்கையில் எஃப்35 போர் விமானத்தின் தேவை இன்றியமையாததாகிறது.

தற்போதைக்கு உலகிலேயே விற்பனைக்கு இருக்கும் ஒரே ஐந்தாம் தலைமுறை போர் விமானம் எஃப்35 ஆகும். அமெரிக்காவை தவிர்த்து இஸ்ரேல், இங்கிலாந்து, ஜப்பான், நார்வே, தென்கொரியா, இத்தாலி, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, துருக்கி ஆகிய நாடுகள் இதை பயன்படுத்தி வருகின்றன இன்னும் சில நாடுகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

1) நாம் இதில் எஃப்35பி ரக விமானத்தை வாங்கினால் நன்று காரணம் இந்த ரக விமானத்தால் செங்குத்தாக மேலேழும்பவும் தரையிறங்கவும் முடியும். எதிரிகள் நம் விமானப்படை தளங்களின் ஒடுபாதையை தாக்கி சேதப்படுத்தினால் கூட இவற்றை இயக்க முடியும் ஆனால் மற்றெந்த ஒரு விமானமும் ஒடுபாதை இல்லாமல் இயங்காது.

2) மேலும் சீன வான்பகுதியை எளிதாக ஊடுருவி தாக்குதல் நடத்த இந்த வகை விமானங்கள் உதவும்.

3) சீனாவும் எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி வரும் நிலையில் இத்தகைய ஸ்டெல்த் விமானம் நமக்கு இன்றியமையாதது ஆகும்.

4) இந்த வகை விமானம் நமது கடற்படைக்கு வாங்கப்பட்டால் சிறிய ஒடுதளம் கொண்ட ஹெலிகேரியர்களையும் விமானந்தாங்கி கப்பல்களாக பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலமாக நமது கடற்படையின் சக்தி பலமடங்கு அதிகரிக்கும். இந்திய பெருங்கடல் பகுதியில் நமது ஆதிக்கம் நிலைபடுத்தப்படும்.

5) இது 1239 கிமீ தொலைவு பயணிக்கும் ஆற்றல் கொண்டது இதனால் வியூக முக்கியத்துவம் வாயந்த மலாக்கா ஜலசந்தி போன்ற பகுதிகளில் சீன கடற்படையின் நடமாட்டத்தை எளிதில் முடக்க முடியும். மேலும் போர் ஏற்பட்டால் ஏடன் வளைகுடா வழியாக பாகிஸ்தான் வரும் எண்ணெய் சப்ளையை நிறுத்தி பாகிஸ்தானை ஒட்டுமொத்தமாக முடக்க முடியும். இதனால் நடுவானிலேயே எரிபொருள் நிரப்பி கொள்ளவும் முடியும் இதன் மூலம் இயக்கவரம்பு பன்மடங்கு அதிகரிக்கும்.

6) மேலும் போரின் தன்மை மாறும்போது அல்லது தீவிரமடையும் போது இந்திய கடற்படையால் இந்த விமானங்களை கொண்டு இந்திய விமானப்படைக்கு உறுதுணையாக இயங்க முடியும்.

7) எஃப்35ஏ எனும் விமானப்படைக்கான பிரத்யேக விமானத்தையும் எஃப்35பி எனப்படும் கடற்படை ரகத்தையும் ஒரு சேர பயன்படுத்துவதன் மூலம் நமது திறன் பன்மடங்கு அதிகரிக்கும்.

8) இதன் நவீனத்துவம் உலகின் சிறந்த 5ஆம் தலைமுறை போர் விமானமான எஃப்22க்கு அடுத்தபடியானது. உலகின் சிறந்த சென்சார் ஒருங்கிணைப்பு அமைப்பு, உயர் இயங்கு திறன் கொண்ட கணிணி அமைப்புகள் ஆகியவை இதில் உள்ளன.

9) எஃப்35 போர் விமானமானது அதன் ஸ்டெல்த் தன்மையால் எளிதில் ரேடாரில் சிக்காது, அதைப்போல எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை எதிரி வான்வெளிக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ இருந்து தாக்கி அழிக்க முடியும்.

10) 2030ஆம் ஆண்டு வாக்கில் நமது சொந்த 5ஆம் தலைமுறை போர் விமானமான ஆம்கா தயாராகும் வாய்ப்புகள் அதிகம் அப்போது அதே காலகட்டத்தில் நம்மிடம் மற்றொரு ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இருப்பது நமது பலத்தை இந்த பிராந்தியத்தில் பன்மடங்கு அதிகரிக்கும். தற்போது உலகில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இரண்டு ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை கொண்டுள்ளன. ஆகவே எஃப்35 நமக்கு தேவை காரணம் சீனாவுக்கு இணையான பலத்தை பெற முடியும் மேலும் பாக் விமானப்படையை விட நமது பலம் அதிகரிக்கும். பாகிஸ்தானும் ஐந்தாம் தலைமுறை போர் விமானம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

11) இந்த ஒப்பத்தத்தில் இந்தியா வேறேந்த 4ஆம் தலைமுறை போர் விமானங்களை வாங்கினாலும் கூட அது நமது பலத்தை குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே அதிகரிக்கும் ஆனால் எஃப்35 இந்த பிராந்தியத்தில் நமது பலத்தை முற்றிலுமாக மாற்றி நமது புதிய அத்தியாயத்திற்கு இட்டு செல்லும்.

12) இந்த விமானத்தின் வரவால் நமது நாட்டின் பொருளாதாரம் அமைதியாக சீராக எவ்வித பாதுகாப்பு சிக்கலுமின்றி வளரும். இத்தகைய வளர்ச்சி நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடையும்.

இத்தகைய விமானத்தை வாங்குவது பற்றி நமது அரசியல் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். அதிக விலை கொடுக்க வேண்டியதானாலும் இதன் பலன் இந்த தேசத்திற்கு இன்றியமையாததாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.